17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீர்காழியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலித் கூட்டமைப்பினர் 200 பேர் கைது:-

சீர்காழியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலித் கூட்டமைப்பினர் 200 பேர் கைது:-

எழுதியவர்: mohan June 1, 2020, 4:34 pm

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி கண்டித்து தலித் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி தலித்களை இழிவாக பேசியுள்ளதாகவும், அதனை கண்டித்து தலித் கூட்டமைப்பினர் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட தலித் கூட்டமைப்பினர் ஆர்.எஸ் பாரதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும் கைது செய்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!