17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்லம்பட்டியில் திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியை கண்டித்து பட்டியிலின மக்கள் ஆர்ப்பாட்டம்.

செல்லம்பட்டியில் திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியை கண்டித்து பட்டியிலின மக்கள் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan June 1, 2020, 3:16 pm

திமுக செய்தி தொடர்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்எஸ் பாரதி பட்டியிலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக அன்மையில் பேசியிருந்தார். அவர் பேசியது வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததாக கதவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பட்டியிலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியை கண்டித்தும், அவரை கைது அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குறவகுடி வீரபாண்டி கோவிலாங்குளம் கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் மற்றும் தலித் இன மக்கள் சார்பில் ராமன், அய்யர் தலைமையில் உக்கிரபாண்டி, சிவஞானம், மணி ஆகியோர்கள் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊர்வலமாக சென்றும், கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியிலின மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!