17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டியில் முன் விரோதம் காரணமாக காருக்கு “தீ” வைத்த நபர் கைது:  

இராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டியில் முன் விரோதம் காரணமாக காருக்கு “தீ” வைத்த நபர் கைது:  

எழுதியவர்: Askar May 31, 2020, 7:28 am

இராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டியில் முன் விரோதம் காரணமாக  காருக்கு “தீ” வைத்த நபர் கைது;

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சின்னசுரைக்காய்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் நாய் பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது காரினை சின்னசுரைக்காய்பட்டி தெருவில் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரின் முன்பகுதி முழுவதும் மளமளவென எரிந்து தீப்பற்றியதை கண்ட அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இராஜபாளையம் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையிலான வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த இராஜேந்திரன் மகன் கெளதம் என்பவர் முன் விரோதம் காரணமாக தீ வைத்தது தெரிய வந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!