18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து யானைகள் உண்டாக்கிய சேதத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து யானைகள் உண்டாக்கிய சேதத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2020, 12:29 am

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம். உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மா, தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மாங்காய் சீசன் என்பதால் மா மரத்தில் மாங்காய்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக் கோயில் பகுதியில் உள்ள விநாயகமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டுயானைகள் மா மரங்களை உடைத்து சேதப்படுத்தி மாங்காய்களை சாப்பிட்டு விட்டு சென்றுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் யானைகளை வனத்திற்குள் விரட்டவும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!