18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு உத்தரவால் வறுமையில் வாடும் திருநங்கைகள், மலைவாழ் மக்கள் என 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய முதன்மை நீதிபதி..

ஊரடங்கு உத்தரவால் வறுமையில் வாடும் திருநங்கைகள், மலைவாழ் மக்கள் என 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய முதன்மை நீதிபதி..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2020, 12:25 am

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஊரடங்கு உத்தரவால் வறுமையில் வாடும் திருநங்கைகள், மலைவாழ் மக்கள் என 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழ்மையாைனவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை போக்க தமிழக அரசும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரங்கள் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும்,மாவட்ட முதன்மை நீதிபதியுமான முத்துசாரதா ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் உள்ள திருநங்கைகள், மலைவாழ் மக்கள், ஏழை எளிய குடும்பங்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி,காய்கறி தொகுப்பு, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கினைந்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!