18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு..

ராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2020, 12:12 am

ராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி தொண்டைமான் குளம் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன இந்த பகுதியில் மீனுக்காக வலை போட்டு இருந்தபொழுது அதில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமிக்கு தகவல் கொடுத்துள்ளனர் அவர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் வனத்துறை வருவதற்கு முன்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தளவாய்புரம் காவல்துறையினர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர் மலைப்பாம்பை வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!