17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக இன்று (30/05/2020) முதல் இரவு நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பு.

மதுரை மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக இன்று (30/05/2020) முதல் இரவு நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பு.

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2020, 10:19 pm

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை சரவணக்குமார் மற்றும் மாவட்ட அலுவலர் மதுரை கல்யாணகுமார் ஆலோசனையின் பேரில் இன்று இரவு 9 மணிக்கு மேல் மதுரை திடீர்நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய ஊர்தி ரயில்வே ஜங்ஷன், சேதுபதி பள்ளி, சிம்மக்கல் மற்றும் வக்கீல் புது தெரு வழியாக கிருமிநாசினி மருந்து தெளித்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய ஊர்தி இன்று இரவு ஒன்பது மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிருமிநாசினி மருந்து தெளித்தல் பணியிலும், அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய ஊர்தி இரவு 9 மணிக்கு முனிச்சாலை மெயின்ரோடு பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளித்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இப்பணியில் எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், முப்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்களும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்தியாளர்கள் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!