18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏகாபுரம் ஊராட்சி பகுதியில் காவிரி குடிநீர் பைப்பை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்!

ஏகாபுரம் ஊராட்சி பகுதியில் காவிரி குடிநீர் பைப்பை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்!

எழுதியவர்: Askar May 30, 2020, 3:09 pm

ஏகாபுரம் ஊராட்சி பகுதியில் காவிரி குடிநீர் பைப்பை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் ஏகாம்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியிலிருந்து காவிரி குடிநீர் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முறைகேடான இணைப்புகளை அகற்றி வந்தனர், 28.ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சின்னக்குட்டி மகன் பழனிசாமி என்பவர் காவிரி குடிநீர் மெயின் பைப்பை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.மேலும் பைப்பை சேதப்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஏகாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!