17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக தலைவரை கண்டித்து ஜூன் 1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..

திமுக தலைவரை கண்டித்து ஜூன் 1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2020, 1:00 pm

தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் தரக்குறைவான பேச்சைக் கண்டிக்காத தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கண்டித்து அதிமுக., சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜூன் 1 காலை 10:30 மணி முதல் 11 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், மக்கள் அதிகம் கூடுமிடங்கள் என 4 அல்லது 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமன மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!