17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மழையின் காரணமாக 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீடு இடிந்து 80 வயது மூதாட்டி உயிரிழப்பு…

மழையின் காரணமாக 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீடு இடிந்து 80 வயது மூதாட்டி உயிரிழப்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2020, 10:08 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழையின் காரணமாக 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீடு இடிந்து 80 வயது மூதாட்டி உயிரிழப்பு. உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமலிங்காபுரம் பகுதியில் எல்லம்மாள் என்ற 80 வயது மூதாட்டி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இன்று காலை தண்ணீர் எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றபோது திடீரென எதிர்பாராதவிதமாக வீட்டு சுவர் இடிந்து மூதாட்டியின் மீது விழுந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மூதாட்டி எல்லம்மாளை மீட்ட நிலையில் மூதாட்டி எல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!