18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்படும் பலியை தடுக்க அமமுக மனு..

இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்படும் பலியை தடுக்க அமமுக மனு..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2020, 10:00 pm

இராஜபாளையம் நகர் பகுதியில் தாமிரபரணி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தால் சாலைகள் சேதமடைந்து விபத்து ஏற்படுகிறது உயிர் பலி ஏற்ப்படும்முன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் அமமுக கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஒருபுறம் சாலைகளை தோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது மறுபுறம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தி 42 வார்டுகள் மற்றும் அதை இணைக்கும் சாலைகளில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது இதில் குழாய்கள் பதித்த பின்பு சரிவர மூடாமல் பல பகுதிகளில் பள்ளங்களை மூடாமல் சென்று விடுவதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன மேலும் உயிர் பலி ஏற்ப்படும் முன் சரி செய்ய கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாளிடம் மனு கொடுத்தனர் நகராட்சி ஆணையர் இதை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!