17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் மற்றும் தானிப்பாடியில் ஏஐடியூசி ஆட்டோ ஓட்டும் தொழிளாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

செங்கம் மற்றும் தானிப்பாடியில் ஏஐடியூசி ஆட்டோ ஓட்டும் தொழிளாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

எழுதியவர்: Askar May 29, 2020, 7:14 pm

செங்கம் மற்றும் தானிப்பாடியில் ஏஐடியூசி ஆட்டோ ஓட்டும் தொழிளாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஏஐடியூசி ஆட்டோ ஓட்டும் தொழிளாளர்கள் சார்பில் செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சர்தார் தலைமையில் நடைபெற்றது.

மற்றும் தானிப்பாடி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோவில் மூன்று நபர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் , ஆர்டிஓ அலுவலகத்தில் பர்மிட் வழங்கிய ஜீப் கார் வேன் ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், மற்ற மாவட்டத்தைப் போன்று சென்னையிலும் ஆட்டோ அனுமதிக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் பிடிபட்ட ஆட்டோக்களை விடுவிக்க வேண்டும், ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!