17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஆட்சியருடன் முதல்வர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை..

இராமநாதபுரம் ஆட்சியருடன் முதல்வர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2020, 4:09 pm

தலைமை செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நான்காம் கட்ட ஊரடங்கு  நாளை (மே 31) மறுநாளுடன் நிறைவடையும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசித்தார்.

பொது போக்குவரத்து சேவைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆட்சியர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இக்காணொளி காட்சி ஆலோசனை கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!