17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றம் அருகே விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எழுதியவர்: Askar May 29, 2020, 3:10 pm

திருமங்கலம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(42). இவர் மதுரை மீனாட்சி பஜாரில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். தனக்கன்குளம் பெட்ரோல் பங்க் அருகே அதிவேகமாக வந்த ஒரு கார் இரு சக்கர வாகனத்தில் டமாரென்று மோதியது. அதில் கண் இமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்து போனார்.இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின் பட்டி போலீசார் விரைந்து வந்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!