நேற்று (28/ 05/ 2020) பெய்த மழையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து சாய்ந்து கிடக்கிறது. மதுரை மாநகரில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் 7 மணி வரை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது மேலும் மதுரை கோச்சடை மேலக்கால் செல்லும் சாலையில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்தது. மதுரை டவுன் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைக்கவே இன்று (29/05/ 2020//) அதிகாலை முதல் மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறைக்கு பிரத்தியேகமான தொலைபேசி என் 101 என்கின்ற பழுது காரணமாக தீயணைப்புத்துறையினர் சார்பாக அந்தந்த நிலைய அதிகாரிகளின் கைபேசி எண்ணை மதுரை மாவட்ட தீயணைப்பு தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.