17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிகாரர்களின் கூடாரமாக மாறிவரும் சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி; நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

குடிகாரர்களின் கூடாரமாக மாறிவரும் சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி; நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

எழுதியவர்: Askar May 29, 2020, 1:32 pm

குடிகாரர்களின் கூடாரமாக மாறிவரும் சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி; நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

நாட்டில் பரவிவரும் கொரொனா நோய்தொற்று காரணமாக அதை தடுக்கும் வகையில் அரசு 144 தடையுத்தரவு அறிவிப்பு அமுலில் உள்ள நிலையில் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி திறக்கப்படாமல் உள்ளது. இதைசாதகமாக பயன்படுத்தி மதுப்பிரியர்கள் அரசு மேல்நிலை பள்ளியை மது அருந்தும் கூடமாக மாற்றி வருவதோடு காலி பாட்டில்களை உடைத்து பள்ளி மைதானத்தில் வீசுவதால் நடைபயிற்ச்சி மேற் கொள்பவர்களுக்கு இடையூறாக இருப்பதோடு அவர்களது கால்களையும் பதம்பார்க்கும் நிலை தொடர்கிறது. சித்தையன் கோட்டை அரசு மேல் நிலைபள்ளியில் இரவு காவலர்களோ! துப்புரவு பனியாளர்களோ! பனியில் இல்லாத சூழல் உள்ளதால் பாதுகாப்பற்ற தன்மையும் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் சுகாதாரமின்றியும் புதர்மண்டிய நிலையில் காணப்படுகிறது.ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!