தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஒ ஜி ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் சம்பத் வயது 40 இவர் ஒரு பார்வையற்ற பட்டதாரி ஆவார்.இவர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயில் பெட்டிகளில் புத்தகங்களை கையில் எடுத்து க்கொண்டு விற்பனை செய்து வந்தார். கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு காரணமாக மத்திய மாநில ஊரடங்கு அமலில் உள்ளதால் தனது சொந்த ஊருக்கு கால் நடையாகவே வந்து சேர்ந்தார். வந்த உடன் தன்னை அவ்வூர் சுடுகாட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அவ் வழியாக போவோர் வருவோர் அனைவரிடமும் தன்னை கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சை முகாமிற்க்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டுள்ளார். பஞ்சாயத்து தலைவரிடமும் கொரோனா பரிசோதனை காக அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு தன்னார்வலர் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் ஓ ஜி ஹள்ளி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து ஆட்டோ மூலம் செட்டிக்கரை கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பரிசோதனை முகாமிற்க்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதினான்கு நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து வந்த வாலிபரை ஊருக்குள் விட மறுப்பு: சுடுகாட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட பட்டதாரி வாலிபர்..
எழுதியவர்: Askar May 29, 2020, 11:45 am




You must be logged in to post a comment.