17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி கிராமத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒகேனக்கல் குடிநீர் விநியோகம்: கசிவு நீரை பிடிக்கும் அவலம்..

பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி கிராமத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒகேனக்கல் குடிநீர் விநியோகம்: கசிவு நீரை பிடிக்கும் அவலம்..

எழுதியவர்: Askar May 29, 2020, 11:37 am
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சி எர்ரணஹள்ளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் மூலம் கிராமம் முழுவதிலும் குழாய்கள் அமைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் ஒகேனக்கல் குடிநீர் கிராமத்திற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிக்கப் படுவதால் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் பிடிக்க முந்தி அடித்தபடி குடிநீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் பிடிப்பதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஒன்றிய நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும்  கிராமத்தில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் இல்லாத நிலை  உள்ளது. தங்கள் அடிப்படை தேவைக்குகூட தண்ணீர் இல்லை என்றும் தண்ணீருக்காக பலகிலோ மீட்டர் தூரம் காலிகுடங்களுடன் சென்று ஒகேனக்கல் குடிநீர் குழாயில் எந்த பகுதியில் கசிவு நீர் வருகின்றது என்று பார்த்து காலிகுடங்களுடன் பலமணி நேரம் காத்திருந்து தண்ணீர் கொண்டும் வரும் அவலநிலையில் தான் உள்ளதாகவும், ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்படுவதால் பெருபாலன விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளை விற்பனை செய்து விட்டதாகவும், மனித தேவைக்கு குடிநீர் வேண்டும் என்பதால் கிராம மக்கள் கால்நடையாகவும், சைக்கிள் இருசக்கர வாகனம் என நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாக பொதுமக்கள் கண்ணீர் மல்கதெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம்   உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒகேனக்கல் குடிநீரை கிராமத்திற்கு முறையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!