18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசி அருகே தந்தையே தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயற்ச்சி, 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…

சிவகாசி அருகே தந்தையே தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயற்ச்சி, 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…

எழுதியவர்: Askar May 29, 2020, 9:26 am

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் கிராமத்தில் தந்தையே தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயற்ச்சி 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ முனி(37) இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (28/05/2020) பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சிவமுனி தனது மனைவி வேலைக்குச் சென்ற நிலையில் தனது குழந்தைகள் சிவரஞ்சனி (8), விஜயலட்சுமி (9) சிவபிரசாத் (3) ஆகிய மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்ச்சி செய்துள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார் நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பின்புறமாக கதவை திறந்து பார்த்த போது குழந்தைகள் மூன்று பேரும் சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருந்தனர்.

உடனடியாக 4 பேரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இதில் சிவரஞ்சனி (8) வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை சம்பவம் எதற்காக நடந்தது குடும்ப பிரச்சனையா அல்லது சொத்து பிரச்சனையா என்கிற கோணத்தில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!