17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விடாமல் பெய்த மழை; திருப்பரங்குன்றம் மலைப்பாதை செல்லும் படிக்கட்டில் அருவி போல் கொட்டிய நீர்; ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள்!

விடாமல் பெய்த மழை; திருப்பரங்குன்றம் மலைப்பாதை செல்லும் படிக்கட்டில் அருவி போல் கொட்டிய நீர்; ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள்!

எழுதியவர்: Askar May 28, 2020, 11:11 pm

விடாமல் பெய்த மழை; திருப்பரங்குன்றம் மலைப்பாதை செல்லும் படிக்கட்டில் அருவி போல் கொட்டிய நீர்; ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள்!

ஆறுபடை வீடுகளின் முதல் படைவீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று பெய்த கன மழையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் செல்லும் படிக்கட்டில் ஆறு போல நீர் வடிந்து ஓடியது.

மேலும் மலை முழுவதும் அருவி போல் கொட்டிய காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அதை கண்டுகளித்தனர். இதுவரை இது போன்று படிக்கட்டுகளில் நீர் வந்ததை பார்த்ததே இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இன்று (28/05/2020) மாலை சரியாக மூன்று மணி முதல் பலத்த மழை பெய்து வந்தது சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டிய காரணத்தினால் படிக்கட்டுகளிலும் மற்றும் மலையின் மீதும் நீர் வழிந்தோடும் காட்சிகள் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!