17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐக்கிய அமீரகத்தில் நாடு திரும்ப முடியாமல் அவதி:தமிழகத்திற்கும் அதிகமான விமான சேவையை இயக்க வேண்டும்;நவாஸ்கனி MP கோரிக்கை..

எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐக்கிய அமீரகத்தில் நாடு திரும்ப முடியாமல் அவதி:தமிழகத்திற்கும் அதிகமான விமான சேவையை இயக்க வேண்டும்;நவாஸ்கனி MP கோரிக்கை..

எழுதியவர்: Askar May 28, 2020, 10:56 pm

எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐக்கிய அமீரகத்தில் நாடு திரும்ப முடியாமல் அவதி: தமிழகத்திற்கு 3 விமானங்கள் மட்டும் இயங்க அட்டவணை வெளியீடு.

மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கியது போல தமிழகத்திற்கும் அதிகமான விமான சேவையை இயக்க வேண்டும்:-வெளி உறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் களுக்கு; நவாஸ்கனி MP கோரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றால் தாயகம் திரும்ப முடியாமல் 8000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐக்கிய அமீரகத்தில் அவதியுற்று வருகின்றனர்,

இதில் நோயாளிகள், வியாபார மற்றும் சுற்றுலா விசாவில் சென்றோர் என பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கியது போல் அதிக அளவில் விமானத்தை இயக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடாவுமான கே.நவாஸ் கனி கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!