17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாஜக மூத்த செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று அறிகுறி-அதிர்ச்சியில் பாஜக..

பாஜக மூத்த செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று அறிகுறி-அதிர்ச்சியில் பாஜக..

எழுதியவர்: Askar May 28, 2020, 10:43 pm

பாஜக மூத்த செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று அறிகுறி-அதிர்ச்சியில் பாஜக..

பாஜகவின் மூத்த செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் மத்தியில் ஆளும் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்களில் இதுவரை யாரும் கொரோனாவில் பாதிக்கப்படவில்லை. சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒருவேளை சம்பித் பத்ராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், கடந்த சில நாட்களாக பத்ராவுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த பாஜக தலைவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நேரிடலாம்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!