17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீரபாண்டி ஒன்றிய பகுதியில் தேமுதிக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..

வீரபாண்டி ஒன்றிய பகுதியில் தேமுதிக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..

எழுதியவர்: Askar May 28, 2020, 6:30 pm

வீரபாண்டி ஒன்றிய பகுதியில் தேமுதிக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய பகுதியில் தேமுதிக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வீரபாண்டி ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கார்த்திக் ஏற்பாட்டில் ஏழை,எளிய குடும்பங்களுக்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிவாரண உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலசுந்தரம் ,மாவட்ட தொண்டரணி செயலாளர் வீரகுமார் , ஒன்றிய செயலாளர் சசிகுமார்,இளம்பிள்ளை நகர செயலாளர் நாகராஜ் , பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி,வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!