17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் கருப்புக் கொடியேந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் கருப்புக் கொடியேந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Askar May 28, 2020, 5:32 pm

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் கருப்புக் கொடியேந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..

செங்கோட்டையில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கையில் கருப்பு கொடியேந்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆணையின் படியும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ச.பழனிநாடார் ஆலோசனையின் படியும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், குடிசையில் வாழும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய அரசையும்,அதனை தடுத்து நிறுத்தாத மாநில அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கையில் கருப்பு கொடி ஏந்தி செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் எம்எஸ்.முத்துசாமி தலைமை தாங்கினார். நகரத்தலைவர் இராமர், மாவட்டத் துணைத்தலைவர் இராம்மோகன், முன்னாள் நகரத்தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஐஎன்டியுசி மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், நகர செயலாளர் இசக்கியப்பன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் ராஜீவ்காந்தி, வார்டுத்தலைவர் சுரேஷ்குமார், நகரப் பிரதிநிதி கோட்டைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!