17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று: அலச்சியம் காட்டும் நிர்வாகம்; அச்சத்தில் கிராம மக்கள்…

பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று: அலச்சியம் காட்டும் நிர்வாகம்; அச்சத்தில் கிராம மக்கள்…

எழுதியவர்: Askar May 28, 2020, 5:22 pm
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஜெர்த்தலாவ் ஊராட்சியில் உள்ள  எண்டபட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர்  கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்த நபருக்கு கரோனா  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில்  இவருக்கு ஒரே நாளில் புதியதாகக் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
 வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட  நபர் தனது சொந்த ஊரான எண்டபட்டி, மணியாக்காரன்கொட்டாய், சர்க்கரை ஆலை  என இரண்டு நாட்களில் மூன்று கிராமங்களை சுற்றி வந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.இது சம்பந்தமாக
ஊர் பொதுமக்கள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
பொதுமக்களின் புகாரை அடுத்து  சுகாதாரத் துறை பணியாளர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து சென்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்ததால் பல்வேறு நபர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இதனால்  சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைப்பதில் ஊராட்சி நிர்வாகம்  சரியான முறையில் அமைக்காததால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் இருசக்கர வாகனம் நடைப் பயணமாகவும் உள்ளுக்கும் வெளியேயும் சென்று வருவதால்  மற்ற பகுதிக்கு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வைரஸை வீட்டுக்கு கொண்டு வந்து பாதிப்பை அதிகப்படுத்த வாய்ப்பும் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இவர்களோடு சேர்த்து எட்டு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதியில் முழுமையாக அடைத்து கரோனா வைரஸ் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!