17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசி அருகே பயங்கரம்: தம்பி அடித்துக் கொலை; அண்ணன் கைது!

சிவகாசி அருகே பயங்கரம்: தம்பி அடித்துக் கொலை; அண்ணன் கைது!

எழுதியவர்: Askar May 28, 2020, 2:50 pm

விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி அருகே உள்ள, கள்ளிப்பட்டியில் வசித்துவந்தவர் லிங்கம் (55). இவர் கடந்த 2006’ம் ஆண்டு, தனது மைத்துனரை கொலை செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, இரண்டு ஆண்டுக்கு முன்பு தண்டனை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார்.

இவர் சிறையிலிருந்த போது இவரது மனைவி ராஜமுனியம்மாள், லிங்கத்தின் அண்ணன் காளமேகத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சிறையிலிருந்த லிங்கத்தை அவரது மனைவியும், அவரது அண்ணனும் பார்க்கச் செல்லவில்லை என கூறி விடுதலையான லிங்கம் இருவரிடமும் தகராறு செய்துள்ளார்.

மேலும் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். தம்பி தன்னுடன் தகராறு செய்வது பிடிக்காத அண்ணன் காளமேகம், நேற்று கள்ளிப்பட்டிக்கு சென்று தம்பி லிங்கத்தை சரமாரியாக தாக்கி, கழுத்தை கயிறால் இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இது குறித்து நெடுங்குளம் விஏஓ உமாராணி எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் லிங்கம் உடலை, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தப்பியோடிய காளமேகத்தை, இன்ஸ்பெக்டர் ராஜா கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!