18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில்   800  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம்.எல்.ஏ. வழங்கினார் 

காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில்   800  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம்.எல்.ஏ. வழங்கினார் 

எழுதியவர்: mohan May 28, 2020, 3:00 pm

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  காலகஸ்திநாதபுரம்  ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு  காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையால்புரம் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் கபடி பாண்டியன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!