மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் தனியார் இன்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக சுமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது.
இதில் எந்தவிதமான பாதுகாப்பும் செய்யாமல் குழியைத் தோண்டி விட்டு சென்று விட்டார்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நமது (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ் இணையதள செய்தியாளர் காளமேகத்திடம் தகவல் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இதை செய்தியாக நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். செய்தி வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே ஜேசிபி இயந்திரம் கொண்டு பல்லத்தை முற்றிலுமாக மூடிவிட்டனர். செய்தி வெளியிட்ட (சத்திய பாதை மாத இதழ்) கீழை நியூஸ் இணையதள செய்திக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கும்போது அதிகாரிகள் பொதுமக்கள் புகார் கொடுக்கும் போது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பெரும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் அதிகாரிகளின் மெத்தன போக்கே சில மரணங்களுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.