17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளம், அரிமா சங்கம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில், 100-க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது..

பெரியகுளம், அரிமா சங்கம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில், 100-க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது..

எழுதியவர்: Askar May 28, 2020, 11:22 am

பெரியகுளம், அரிமா சங்கம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில், 100-க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது..

தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை பேரூராட்சி T – கள்ளிப்பட்டி தனியார் மண்டபத்தில் பெரியகுளம் அரிமா சங்கம், மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி ,பருப்பு, சத்தான காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை அரிமா சங்க உறுப்பினர் முனைவர்.த.ராமநாதன் தலைமையில், அறம் மக்கள் நலச் சங்க நிர்வாகி.பி.ஜோனஸ் முன்னிலையில், அரிமா சங்கத் தலைவர் குபேந்திரன், செயலாளர் நித்தியானந்தன், மற்றும், முத்திருளப்பன், ஜெகன், எஸ். மருது,சந்திருளன், உட்பட அரிமா சங்க நிர்வாகிகள், அறம் மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

பயனாளிகள் அனைவருக்கும் முகக் கவசம் வழங்கி, சமூக இடைவெளி அமைத்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அரிமா சங்க உறுப்பினர் முனைவர் ராமநாதன் கூறுகையில் தொடர்ந்து அரிமா சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரேரனா நிவாரண பொருட்கள் வழங்க இருப்பதாகவும்,குடும்ப அட்டை பெறாமல் இறுந்து வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை கண்டறிந்து குடும்ப அட்டை பெறுவதற்கான பரிந்துரை கோரிமாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

A.சாதிக்பாட்சா,நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!