17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் கிடந்த தங்க நகையை நேர்மையாக காவல் நிலையில் ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டு.

சாலையில் கிடந்த தங்க நகையை நேர்மையாக காவல் நிலையில் ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டு.

எழுதியவர்: mohan May 27, 2020, 2:06 pm

சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜ் (21) என்பவர் கீழே கண்டெடுக்கப்பட்ட 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த தகவலை சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து காவல் நிலையம் வந்த, நகையின் உரிமையாளரான தச்சம்பத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி பரமேஸ்வரி என்பவரிடம் விசாரித்து 3 பவுன் தங்க நகையை நேற்று 25.05.20 ம் தேதி காவல் ஆய்வாளர்,ராமநாராயணன் தலைமையில் வழங்கப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவர் லோகேஷ்ராஜை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்a

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!