17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் தோண்டப்பட்ட குழி. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.

பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் தோண்டப்பட்ட குழி. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.

எழுதியவர்: mohan May 27, 2020, 1:50 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் தனியார் இன்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியால் அது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மூடாமல் உள்ளது. சுமார் 10 அடி ஆழம் வரை உள்ள இந்த குழி எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் அந்த குழியில் விழும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் குழந்தைகள் அதிகம் விளையாடுவதால் குழியை எட்டிப் பார்க்கும் ஆர்வத்தில் கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது .சம்பந்தப்பட்ட தனியார் கேபிள் நிறுவனம் இது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் உடனடியாக தோண்டப்பட்ட குழியை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!