18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரையில் சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

எழுதியவர்: mohan May 27, 2020, 1:33 pm

கடந்த 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் முகேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த 40,000 பணத்தை தவறவிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் விக்னேஷ்வரன் என்பவர் பணத்தை எடுத்து பணம் தொலைந்த 15 நிமிடத்தில் பணத்தின் உரிமையாளரை கண்டுபிடித்து காவல் உதவி ஆய்வாளர் கோமதி  முன்னிலையில் ஒப்படைத்தார். நேற்று 26.05.2020-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் , விக்னேஷ்வரன் நேரில் அழைத்து அவரின் நற்செயலை பாராட்டி பண வெகுமதி வழங்கினார்..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!