18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் ஆலயங்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போடும் நூதனப் போராட்டம்; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு..

நெல்லையில் ஆலயங்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போடும் நூதனப் போராட்டம்; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு..

எழுதியவர்: Askar May 27, 2020, 10:21 am

நெல்லையில் ஆலயங்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போடும் நூதனப் போராட்டம்; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு..

ஆலயங்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் நூதனப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் டவுண் சந்திவிநாயகர் திருக்கோவில் முன்பு பிரார்த்தனை மற்றும் தோப்புக்கரணம் போடும் நூதனப்போராட்டம் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில் நடைபெற்றது.100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தோப்புக்கரணம் போடும் நூதனப் போராட்டத்திற்கு சிவா , சுடலை , செல்வராஜ் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சங்கர், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் நமச்சிவாயம் , ராஜசெல்வம் , துரைராஜ் , இசக்கி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காந்திமதிநாதன் இந்து முன்னணி மாநில பேச்சாளர், பாலாஜி கிருஷ்ணசாமி, பிஜேபி வக்கீல் அணி, மாநில செயலாளர் டி.வி.சுரேஷ், பிஜேபி மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், பக்தர் பேரவை மாவட்டச் செயலாளர் குணசீலன், பக்தர் பேரவை மாவட்ட அமைப்பாளர் பரமசிவன், பக்தர் பேரவை மாவட்ட தலைவர் அம்பலவாணன், நெல்லை மண்டல இந்து முன்னணி தலைவர் ரமேஷ் கண்ணன், பாளை ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் மோகன், மானூர் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் மாரியம்மாள் , அருள்ராஜ் , குருசுவாமி , காந்தி , முத்துராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!