17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக ஒன்றியச் செயலாளர் மகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, முறையாக பயிற்சியும் முடித்து, தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உதவி ஆட்சியராக பதவியேற்பு.!

திமுக ஒன்றியச் செயலாளர் மகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, முறையாக பயிற்சியும் முடித்து, தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உதவி ஆட்சியராக பதவியேற்பு.!

எழுதியவர்: Askar May 26, 2020, 7:58 pm

திமுக ஒன்றியச் செயலாளர் மகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, முறையாக பயிற்சியும் முடித்து, தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உதவி ஆட்சியராக பதவியேற்பு.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் சவுந்தரபாண்டியன்,

இவரது மகள் தமிழ் ஓவியா தோட்டக்கலைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை கல்லூரியில் படிப்பை முடித்த தமிழ் ஓவியா, பழனியில் உள்ள கனரா வங்கியில் ஏ.எஃப்.ஓ.வாக (அஸிஸ்டெண்ட் அக்ரிகல்ச்சர் பீல்டு ஆஃபிஸர்) பணியில் சேர்ந்து, ஒரு வருடம் பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த தமிழ் ஓவியா, கனரா வங்கியில் பணியாற்றிக்கொண்டே முதன்மைத் தேர்வுக்கும் தயாராகி உள்ளார்.

அதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, மெயின் தேர்வுக்கான பயிற்சியை சென்னையில் பெற வேண்டி இருந்ததால், தனது வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேரமும் ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி வந்துள்ளார்.

தமிழ் ஓவியாவின் வைராக்கியமும், தொடர் முயற்சியும் அவரை ஐ.ஏஸ்.எஸ். தேர்வில், மேற்குவங்க கேடரில் தேர்ச்சி பெற வைத்தது. இதையடுத்து முசோரியில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடித்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சவுத் 22 பர்கானா என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!