18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீர்காழி அருகே மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் :

சீர்காழி அருகே மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் :

எழுதியவர்: mohan May 26, 2020, 6:26 pm

மத்திய அரசு புதிய மின்சார வரைவு மசோதாவை தாக்கல் செய்துள்ளது இதனால் விவசாயத்திற்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் ரத்து செய்யப்படும் சூழல் எழுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் முழுமையாக கடைமடைவரை வந்து சேருவதில்லை இந்த விலையில்லா மின்சாரம் மூலம் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன மத்திய அரசின் புதிய மசோதா மூலம் மின்சாரத்திற்கு கட்டணம் விதிக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும் மத்திய அரசின் இந்த மின்சார மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில்,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முஹம்மது இப்ராஹிம் மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் தென்னரசு விவசாய வட்டார தலைவர் இளங்கோவன் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!