18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிடங்கல்  ஊராட்சியில் 600  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம்.எல்.ஏ. வழங்கினார் 

கிடங்கல்  ஊராட்சியில் 600  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம்.எல்.ஏ. வழங்கினார் 

எழுதியவர்: mohan May 26, 2020, 5:39 pm

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  கிடங்கல்  ஊராட்சியில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ.எஸ்.பவுன்ராஜ்    வழங்கினார்.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிடங்கல் ஊராட்சியில் 600-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அன்றாடத் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் 600-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  வழங்கி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் செம்பை அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரராஜன், கிடங்கல் ஊராட்சிமன்ற தலைவர் அமுதா அன்பழகன், ஊராட்சி செயலர் மாரி தட்சிணாமூர்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் இராமலிங்கம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!