18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு……..

கீழக்கரையில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு……..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2020, 4:29 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் இன்று கீழக்கரையில் பாரத ஸ்டேட் வங்கி, கிழக்கு தெரு,  சாலை தெரு, அண்ணாநகர் பகுதிகளை பகுதிகளை ஆய்வு நடத்தினார்.

பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கரோனா வைரஸ் உள்ள பகுதியில் மட்டும் வங்கிகள் திறக்கப்படாது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து வங்கிகளும் எப்போதும் போல் செயல்படும் என்று கூறினார்.

இதில் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, கீழக்கரை சரக காவல் கண்காணிப்பாளர் முருகேசன், கீழக்கரை காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!