18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையின் உடல்நிலை குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார் .

திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையின் உடல்நிலை குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார் .

எழுதியவர்: mohan May 26, 2020, 3:21 pm

யானையின் உடல் நலம் குறித்து கால்நடை துறை மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கோயிலுக்கு சொந்தமான தெய்வானை கோயில் வலாகத்தில் வளர்க்கப்படுகிறது.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக யானைக்கு திடீரென மதம் பிடித்து தாக்கியதில் பாகன் காளிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார் .

இதனை தொடர்ந்து கால்நடை துறை மற்றும் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தெய்வானையை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தனர்.தற்பொழுது யானை தெய்வானைக்கு நடைபெற்றுவரும் சிகிச்சை முறைகள் வழிகாட்டுதல் குறித்து திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவத் துறையிடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ சரவணன் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து யானை இயல்பு நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.இறந்த பாகன் காளிமுத்து குடும்பத்திற்கு நிவாரண உதவியும் .காளிமுத்து மனைவிக்கு தமிழக அரசு .உடனடியாக அரசு வேலையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!