17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோலைமலை முருகன் கோயிலில் ஜூன்.4-ல் மகா அபிசேகம். உதவி ஆணையாளர் தகவல்

சோலைமலை முருகன் கோயிலில் ஜூன்.4-ல் மகா அபிசேகம். உதவி ஆணையாளர் தகவல்

எழுதியவர்: mohan May 26, 2020, 3:14 pm

மதுரை அழகர்கோயிலில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஜூன். 4-ம் தேதி வைகாசி விசாக நட்தத்திரத்தன்று காலை 11 மணிக்கு சண்முகருக்கு மகா அபிசேகம் நடைபெறும் என, கோயில் செயல் அலுலரும் உதவி ஆணையாளருமான அனிதா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியது:..

சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடங்கி ஜூன். 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினசரி காலை 11 மணிக்கு சண்முக அர்ச்சணையும், மாலை 6 மணிக்கு தீபாராதணையும் நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.இதேபோல், மதுரை கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோயிலில், வைகாசி வசந்த உற்சவமானது, மே. 27-ம் தேதி தொடங்கி, ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி, இக் கோயில் வளாகத்தில் வசந்த உற்சவமானது, தினசரி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். ஜூன் 1-ம் தேதி முதல் அரசு வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!