18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு பணி..

சுரண்டை அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு பணி..

எழுதியவர்: mohan May 26, 2020, 2:17 pm

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அனைத்து தெருக்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கவும், பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி ஆலோசனையின் படி சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்தர் மற்றும் ரவீந்திரன், பொன்ராஜ், உதயபிரகாஷ்,  உலகநாதன், சண்முகையா, ராஜேந்திரன், மாரியப்பன், திலகர், வெள்ளைப்பாண்டி ஆகியோர் அடங்கிய வீரர்கள் தினமும் கிருமி நாசினி தெளித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!