17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பணி அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

நிலக்கோட்டை பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பணி அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

எழுதியவர்: mohan May 26, 2020, 1:11 pm

நிலக்கோட்டை பேரூராட்சியில் கடந்த சில தினங்களாக பேரூராட்சி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 90 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் நிலக்கோட்டை 8 அருணா நகரில் அமைக்கப்படும் தார்சாலை தற்போது ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அகற்றப்படாமல் அப்படியே தார்ச்சாலை அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.    இதன் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் தார் சாலை அமைத்து எந்தவிதமான களுக்குப் பயன் படும் வகையில் இருக்காது எனவே இப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விட்டு தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது கார் சாலை சர்வே செய்யப்படாமல் அமைக்கப்படுவது உண்மைதான் என கூறினார்கள். இதனால் இந்தப் பணியை முறையாக உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு தார்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!