17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரை காஞ்சிரங்குடியில் வடமாடு எருது கட்டு விழா..

கீழக்கரை காஞ்சிரங்குடியில் வடமாடு எருது கட்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் August 10, 2017, 12:28 am

கீழக்கரை காஞ்சிரங்குடியில் வரும் 16-08-2017 (புதன் கிழமை) அன்று வடமாடு எருது கட்டும் விழா காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஶ்ரீ கண்ணண் கோயில் திடலில் நடைபெற உள்ளது.

இவ்விழா வரும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணாபுரம் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு பல மாவட்டங்களிலும் இருந்து எருது மாடுகளும், எருது பிடியில் பயிற்சி பெற்ற வீரர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த விழாவைப் பற்றி விழாவின் ஓருங்கிணைப்பாளரும், முன்னாள் ஊராட்சி ஓன்றிய தலைவருமான ஆதித்தன் கூறுகையில், இந்த வடமாடு எருது கட்டு விழா இராமநாதபுர மாவட்டத்தில் முதன் முறையாக கிருஷ்ணாபுரத்தில் நடைபெறுகிறது. மேலும் மற்ற ஊரில் நடக்கும் மாடுபிடி போல் இல்லாமல், இந்த போட்டியில் 30 அடி தூர சுற்றுவட்டத்தில் மொத்தம் 9 வீரர்கள் மட்டுமே எருது பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள், அவ்வாறு அனுமதிக்கப்படும் நபர்கள் 25 நிமிடத்தில் எருதை பிடிக்க வேண்டும், அவ்வாறு பிடிக்கவில்லை என்றால் இறக்கி விடப்பட்ட எருது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றார்.

அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது.  அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இந்நிகழ்ச்சியை காண தனியாக வேலி அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!