18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தனியார் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள்..

மதுரையில் தனியார் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2020, 10:10 pm

ராஜ் அசோசியேட்ஸ் (கட்டுமான நிறுவனம்) மதுரை நேரு யுவகேந்திராவின் பாலம் யூத் வெல்பேர் கிளப், எக்ஸோடஸ் அறக்கட்டளை சார்பாக கொரோணா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ள அரிசி பருப்பு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் 1000 நபர்களுக்கும் மற்றும் 7000 ஹார்லிக்ஸ் பாட்டில்களும் இன்று வழங்கப்பட்டது.

இந்த விழாவினை மதுரை மக்களைவை உறுப்பினர் சு.வெங்கடேசன் திங்கள்(இன்று) காலை 11.00 மணி அளவில் யா.நரசிங்கம் சமுதாயக் கூடத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு த.ராஜேஸ் தலைமையும் டைட்டஸ் முன்னிலையும் வகித்து. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!