18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நோன்பு பிடித்த சிறுவர், சிறுமிகளை ஊக்கமூட்டும் வகையில் பரிசு வழங்கப்பட்டது…

நோன்பு பிடித்த சிறுவர், சிறுமிகளை ஊக்கமூட்டும் வகையில் பரிசு வழங்கப்பட்டது…

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2020, 5:47 pm

கடந்த வருடம் ரமலானில் அனைத்து நோன்பையும் முழுமை செய்நு இரவு தொழுகை என அனைத்து கடைமைகளையும் சிறப்பாக நிறைவேற்றிய  குழந்தைகளுக்கு மட்டும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த வருடம் முதல் பரிசை தட்டி சென்ற குட்டீஸ் அஹ்சன். இந்த ரமலான் மாதத்தில் அனைத்து நோன்பையும் நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து ஊரடங்கு அறிவிப்பு வந்ததில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை மற்றும் ஜூம்ஆ உரையாற்றியது மற்றும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த வாரங்கள் அருகில் நடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு சென்று உரையாற்றி சிறப்பித்தார என்ற அடிப்படையில் முதல் பரிசை தட்டி சென்றார்.

இரண்டாவது பரிசை அல்அமான் என்ற சிறுவன் தட்டிச் சென்றான். அவன் குறைவான நோன்பை மட்டுமே பிடித்திருந்தாலும், நோன்பு காலங்களில் மிகவும் கட்டுப்பாடாகவும், ஒழுக்கமாகவும் இருந்ததை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டைவீட இந்த ஆண்டு அதிகமதிகமான குழந்தைகள் நோன்பு வைத்ததால் நோன்பு வைத்த அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வை அபுபக்கர் என்ற சகோதரர் தன் குடும்பத்தில் இந்த முயற்சியை செய்து வருகிறோர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!