17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 50,000 காசோலையை வழங்கிய புதுமண தம்பதியர்..

கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 50,000 காசோலையை வழங்கிய புதுமண தம்பதியர்..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 10:42 pm

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களை கடந்த நிலையில் தற்போது பல்வேறு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணம் போன்ற விசேச நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவில் மட்டுமே மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் கபில்ராஜ் (எ) ஆதித்யா என்பவருக்கும் சப்தமி என்பவருக்கும் விருதுநகரிலுள்ள தனியார் மண்டபத்தில் வைத்து இன்று திருமணம் நடைபெற்றது.

இத்திருமணமானது ஊரடங்கு உத்தரவை மீறாத வகையில் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்றது. அதை தொடர்ந்து மணமக்கள் மாஸ்க் அணிந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முகாமில் ஆட்சியர் கண்ணனிடம் ரூபாய் 50000க்கான கசோலையை கரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!