17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 2ம் கட்டமாக புலம்பெயர்ந்த தொழிலார்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்..

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 2ம் கட்டமாக புலம்பெயர்ந்த தொழிலார்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 10:36 pm

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 2ம் கட்டமாக புலம்பெயர்ந்த தொழிலார்கள் 160 அவர்கள் சிறப்பு பேருந்து மூலம் மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன அங்கிருந்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் பீகார் புறப்பட்டுச் சென்றார்கள்.

இந்தியா முழுவதும் கடந்த 60 நாட்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க ஊரடங்கு அமலில் இருப்பதால் பல தரப்பினர் வேலையிழந்து வருகின்றனர் இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மாநில மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த 17ம் தேதி 503 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் முலம் பீகாருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் அடுத்து இன்று (24/05/2020) இரண்டாம் கட்டமாக தனியார் ஆலைகளில் பணிபுரிந்த 160 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6 சிறப்பு பேருந்துகள் மூலம் மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து நண்பகல் 2 மணி அளவில் பீகார் செல்லும் சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன்பாக விருதுநகர் ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!