17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கல்!

செங்கத்தில் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கல்!

எழுதியவர்: Askar May 24, 2020, 10:28 pm

செங்கத்தில் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கல்!

திருவண்ணாமலை ரெட் கிராஸ் மற்றும் செங்கம் ரெட்கிராஸ் சங்கம் இணைந்து செங்கம்மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குழந்தைகள் மற்றும் கிராம பஞ்சாயத்தில் உள்ள ஒரு வயது முதல் 5 வயது குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. செங்கம் மற்றும் புதுப் பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செங்கம் ரெட்கிராஸ் சங்க தலைவர் வெங்கடாஜலபதி தலைமைதாங்கினார் .செயலாளர் தனஞ்ஜெயன் அனைவரும் வரவேற்று பேசினார். மாவட்ட ரெட்கிராஸ் சங்கத்தலைவர் இந்திரா ராஜன் செங்கத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சத்தியமூர்த்தி செயல் அலுவலர்கள் திருமூர்த்தி புதுப்பாளையம் ராதாகிருஷ்ணன் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஒன்றிய தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கினார் முன்னாள் கவுன்சிலர் சர்தார் ரூஹுல்லா வெற்றிக்கனி, சங்கர், சரவணகுமார் உட்பட உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!