18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையிலிருந்து புளியங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் லாரியில் மோதி விபத்து..

மதுரையிலிருந்து புளியங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் லாரியில் மோதி விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 10:25 pm

மதுரையிலிருந்து புளியங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மார்க்கெட் அருகே மதுரையிலிருந்து சொந்த ஊரான புளியங்குடி இருசக்கர வாகனத்தில் தந்தை பக்ரூதின் மற்றும் அவரது 7 வயது மகன் இப்ராஹீம் என்பவரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது ராஜபாளையம் நோக்கிச் சென்ற லாரியில் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் சக்கரம் சிறுவனின் மேல் ஏறியதில் ஒரு கால் மற்றும் இடுப்பு பகுதி முற்றிலுமாக நசுங்கியது.

இந்த தகவலை அடுத்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. 7வயது சிறுவன் இப்ராஹீம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மகன் உயிருக்குப் போராடியதை பார்த்து தந்தை அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரானா – வினால் பஸ் போக்குவரத்து இல்லாத இந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுவர்களை முன்புறம் அமர வைத்து கவனமாக கொண்டு சென்றிருந்தால் இந்த விபத்துக்கள் நடந்து இருக்காது என சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!