18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை மிதித்து ஒருவர் பலி அதிர்ச்சியில் பக்தர்கள்..

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை மிதித்து ஒருவர் பலி அதிர்ச்சியில் பக்தர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 9:59 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை மதம் பிடித்து காளிமுத்து என்ற பாகனை மிதித்தது – அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை பாகன் காளிமுத்து என்பவரால் குளிப்பாட்டும் போது திடீரென்று மதம் பிடித்தது. இதில் யானை பாகன் காளிதாஸ் தூக்கி வீசப்பட்டதோடு மட்டுமில்லாமல் மிதித்தது.

இதில் மிகவும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பாகன் காளி என்கின்ற காளிதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை மதம் பிடித்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!