தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் 39 ஆம் ஆண்டு நினைவு நாள்:மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி!
தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் ஆதித்தனார் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார், தேர்தல் பணி மாநிலத் துணைச் செயலாளர் பூங்க ஆர்.ராமதாஸ், தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.எஸ்.ஹரி, அக்பர் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.




You must be logged in to post a comment.